Tuesday, June 18, 2013

இலட்சியப் பயணம்

                                                      நாவல் :           இலட்சியப்  பயணம்
                            நன்றி : குமாரி புஷ்பவள்ளி, செலெசா ஜெயா இடைநிலைப்பள்ளி




தலைப்பு
இலட்சியப்  பயணம்
நாவலாசிரியர்
ஐ. இளவழகு
இயற்பெயர்
ஆறுமுகம்
புனைப்பெயர்
ஐ.இளவழகு ( சிறப்பு அடை )
ஆசிரியரின் பிற படைப்புகள்
·         மனிதனின் கதை ( டில்லி பல்கலைக்கழக துணை நூல்)
·         மண்ணுக்குச் சொந்தம்( சிறுகதை )
·         வேலவன் வெண்பா ( கவிதை )
·         மீட்சி ( சிறுகதை)
·         அமுதும் தேனும்( கவிதை)
·         அன்னைக்கோர் அணியாரம் ( கவிதை)
வெளியீடு
சன் ரயில் ஸ்டோர்
அத்தியாயம்  Bab
35
இலட்சியப் பயணம் சொல் விளக்கம்
காலமெல்லாம் தோட்டத் தொழிலாளியாகவே அடிமை வாழ்வில் உழன்று வரும் தோட்டச் சமுதாயம் எழுச்சிப் பெற்று முதலாளித்துவ நிலைக்கு உயர வேண்டும் என்ற சிந்தனையே இங்கு இலட்சியப் பயணமாகக் காட்டப்படுகிறது. உயர்ந்த கனவுகளை அடைவதற்காக ஒரு தோட்டப்புற இளைஞன் சவால்களையும் போராட்டங்களையும் கண்டு பின்வாங்காமல் தொடர்ந்து தன் இலக்கை அடைவதற்காக எடுக்கின்ற படிப்படியான முயற்சிகள் அவனை வெற்றிக் கனிகளைக் கொய்க்க வைக்கின்றன.
கருப்பொருள் Tema
உயர்ந்த இலட்சியமும் கடின உழைப்பும் வெற்றியைத் தேடித் தரும்
துணைக்கருப்பொருள்
Persoalan
·         தோட்டப்புற வாழ்வின் போராட்டங்கள்
·         முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கம்
·         குடும்ப நலனுக்காகத் தியாக சிந்தனை
·         தொழிற்சங்கமும் தொழிலாளர் ஒற்றுமையும்
·         சமுதாயத்தைச் சீரழிக்கும் மது பழக்கம்
·         கூட்டுறவும் தமிழர் முன்னேற்றமும்
·         மலையகத்தையே தாயகமாகக் கொள்ளுதல்
·         இளைய சமுதாயத்தின் பல்வேறு சிக்கல்கள்/ நிலையற்ற சூழலில் தடுமாறும் இளைய சமுதாயம்
நோக்குநிலை
 Sudut Pandangan
புறநோக்குநிலை / எல்லாம் அறிந்த இறைநோக்குநிலை
பாத்திரங்கள்

அ) முதன்மை   Utama
ஆ) துணை Sampingan







இ) எதிர்மறை Antagonis

- மருதன்
- ராதா( மருதனின் காதலி + தண்டலின் மகள் )
- லீலா ( மருதனை விரும்பும் பெண்)
- தமிழ்ச்செல்வன் ( மருதனின் உற்றத்தோழன் )
- ஆறுமுகம் ( தொழிற்சங்கத் தலைவர்)
- மணியன் ( ராதாவின் அண்ணன் )
- ஆண்டியப்பன் ( மருதனின் அப்பா )
- வேலம்மா( மருதனின் அம்மா )
- மனோகரி( மருதனின் முதல் தங்கை )
- சங்கரி ( மருதனின் இரண்டாவது தங்கை)
- மதியழகன் ( மருதனின் தம்பி )
- தங்கம்( மருதனுக்கு அக்காள் போன்ற உறவு- ராதாவின் அண்டைவீட்டுக்காரர் )
- கோதண்டம்( தோட்டத் தொழிலாளி )
- தண்டல் தர்மலிங்கம் + இராஜம்மா ( ராதாவின் பெற்றோர்)
- நீலா ( மணியத்தின் காதலி )
- அசாப்புக்காரர் முனுசாமி, முனியம்மா ( நீலாவின் பெற்றோர் )
·         பெரிய கிராணி   - சின்னக்கிராணி முத்து   - சின்னக் கிராணி சண்முகம்
கதைப் பின்னணி Latar
அ) இடப்பின்னணி
    Latar tempat

ஆ) காலப்பின்னணி
    Latar masa


இ) சமுதாயப்பின்னணி  
    Latar masyarakat

·         பாடாங் தோட்டம்    - சித்தியவான்  - ஈப்போ  - தெலுக்கான்சன்   - பினாங்கு
·         மருத்துவமனை      -  பாட்டாளித் தோட்டம்
1957ல் நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னும் 1963ல் மலேசியா உருவாக்கத்திற்குப் பின்னும் பிற சமூகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த வேளையில் தோட்டப்புறத் தமிழர்கள் பல்வேறு துறைகளில் பின்தங்கியிருந்த காலம். மேலும், இந்நாட்டில் பிறந்த புதிய தலைமுறையினர் இந்நாட்டைச் சொந்த நாடாகக் கருதிய வேளையில் மூத்த தலைமுறை மீண்டும் தமிழகத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற சிந்தனையோடு நம் சமுதாயம் உழன்று கொண்டிருந்த காலம் .
·         முதலாளித்துவ ஆதிக்கம்   
·         தொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டம்
·         பல்வேறு சமூக சீர்கேடுகளில் உழலும் சமுதாயம்
·         பெண்ணுரிமை வழங்காத சமுதாயம்
·         சமுதாய நலனுக்காகப் போராடும் சமுதாயம்
·         கல்வியில் முன்னேற்றம் காண விரும்பும் சமுதாயம்
·         வாழ்வில் முன்னேற்றத்தைக் காண விரும்பும் சமுதாயம்
·         பிறருக்கு நல்வழிகாட்டுதல்
உத்திமுறை  Teknik
·         பின்நோக்கு உத்தி   - முன்னோக்குஉத்தி   - கவிதை உத்தி   - நனவோடை (monolog)
·         செய்யுள் உத்தி    - உரையாடல் உத்தி     - உரை உத்தி ( வாழ்த்து, நன்றி)
மொழிநடை Gayabahasa
·         இலக்கிய நடை   - பேச்சு வழக்கு   - வருணனை   -  திசைச் சொற்கள் ( மலாய், ஆங்கிலம் )    - துறைசார்மொழி/ வட்டார வழக்கு ( ஒட்டுக்கண்ணு, தீட்டுக்கல் )
·          மொழியணி ( உவமை, மரபு, இணைமொழி, இரட்டைக்கிளவி)   -

கதைப் பின்னல்  Plot
·         தொடக்கம் : பக்கத்துப் பக்கத்து நிரையில் ராதாவோடு மருதன் பால்மரம் சீவுகின்றான். ராதாவோடு காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறான். சின்னக்கிராணி முத்துவினால் கோதண்டம் பாதிக்கப்படுகின்ற சிக்கலுக்குக் குரல் கொடுக்கின்றான். தனது உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கான எண்ணம் அவனுக்குள் அழுத்தமாய் வேர் விடுகிறது.

·         வளர்ச்சி : தோட்டத் தொழிலாளர் நலனுக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதால் சின்னக்கிராணி வேலை கொடுப்பதற்கு ஆசை வார்த்தைகளைப் பெரிய கிராணி கூறுகின்றார். ஆண்டியப்பனும் வேலம்மாளும் வேண்டிக் கேட்டுக் கொண்டாலும் பொதுநலம் கருதி அதை மறுத்துவிடுகின்றான் மருதன்.

·         சிக்கல் : 1. ராதாவின் திருமணம் – காதல் கைக்கூடவில்லை
        2. தலைவர் ஆறுமுகம் வேறு தோட்டத்திற்குச் செல்லல் / வெளியேற்றப்படல்
        3. தமிழத்திலிருந்து திரும்பிய ஆண்டியப்பன் மரணம்
        4. லீலாவின் காதல் – மறுக்க வேண்டிய கட்டாயம்

·         உச்சம் : சித்தியவானுக்குப் பக்கத்திலுள்ள மிகப் பெரிய தோட்டத்தை வாங்கினான் மருதன்.தனது மற்ற வியாபாரத்தையெல்லாம் ( புத்தகக்கடை, சாப்பாட்டுக்கடை, துணிவியாபாரம், சிறுதோட்டம்) விற்று பெரிய ரப்பர் தோட்டம் ( 1000 ஏக்கர்) ஒன்றை வாங்கி அதற்குப் பாட்டாளித் தோட்டம்  என்றுபெயரிட்டு தனது உயர்ந்த இலட்சியத்தை அடைகின்றான்.
·         சிக்கல் அவிழ்ப்பு : 1. பாட்டாளித் தோட்டத்தில் மக்களுக்குப் பல வசதிகளை ஏற்படுத்துதல்
                        2. பாட்டாளித் தோட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா


படிப்பினை  / நீதி
Nilai & Pengajaran
·         நன்னோக்கும் விடாமுயற்சியும் வெற்றியளிக்கும்
·         வாழ்கைப் போராட்டங்களை எதிர்கொள்ள மன வலிமை வேண்டும்
·         குடும்ப நலனில் அக்கறை வேண்டும்
·         ஒற்றுமை உயர்வை அளிக்கும்
·         சமுதாய மீட்சிக்கு மது ஒழிப்பு அவசியம்
·         தமிழர்களின் வியாபார ஈடுபாடு / பொருளாதார முன்னேற்றம்
·         இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்துதல்
·         பெண்களுக்கு உரிமை வழங்கப்படல் வேண்டும்
·         நாட்டுப்பற்று அவசியம்
கதைச் சுருக்கம்
Sinopsis
   மருதன் என்ற இலட்சியம் மிகுந்த இளைஞன், பேரா மாநிலத்தில் உள்ள பாடாங் தோட்டத்தில் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறான். பெற்றோடு அவனும் தோட்டத்தில் பால் மரம் சீவும் வேலை செய்து வருகிறான்.மூன்று  உடன் பிறப்புகளின் கல்வி வளர்ச்சிக்காக எல்.சி.இ. வரை படித்திருந்து தன் கல்வியைப் பாதியிலேயே நிறுத்துகிறான். தோட்டத் தொழிற்சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் தலைவர் ஆறுமுகத்தோடு சேர்ந்து தோட்டத் தொழிலாளர் நலனுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபடுகிறான். மேலும், கல்வியில் அக்கறை உடையவனாக இருப்பதால் மாலையில் தோட்டத்து பிள்ளைகளுக்கு வகுப்பு நடத்துகின்றான்.
    மருதன், தண்டல் தர்மலிங்கத்தின் மகளான இராதாவை மனதார விரும்புகின்றான். அவனுடைய காதலுக்கு ராதாவின் அண்ணன் மணியன் தடையாக இருக்கிறான். இராதாவிற்கு அவளுடைய அத்தானை பெற்றோர் மணம் பேசி முடிப்பதால் மனம் நொந்து போகிறான். தங்கத்தின் வீட்டில் அவளைச் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு தனது நிலைமையையும் அவளிடம் விளக்குகின்றான். இதற்கிடையில் மேட்டுக் கடை லீலாவின் அறிமுகம் மருதனுக்குக் கிடைக்கிறது.தன்னுடைய எழுத்து ஈடுபாட்டால் லீலாவையும் எழுத்தத் தூண்டி அவள் மனத்தில் குடியேறுகிறான்.
    தோட்டத்து மக்கள் மக்கள் மது , சூது மற்றும் கடனில் தத்தளிப்பதைக் கண்டு மனம் வேதனைப் படுகின்றான்.தனது பேச்சாற்றலால் தோட்டத்து மேலாளரிடம் பேசி பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்த சின்னக்கிராணி முத்துத் தோட்டத்தை விட்டு மாற்றச் செய்கின்றான். அவனுடைய தமிழுணர்வும் ஈடுபாடும் அவனுக்கு பாடாங் தோட்டத்திற்கு அப்பால் வெளியுலக தொடர்பையும் ஏற்படுத்தியிருந்தது. தனது நண்பர்களின் அழைப்பிற்கிணங்க மருதன் சித்தியவானில் நடைபெற்ற திருவள்ளுவர் ஆண்டு விழாவிற்குச் சென்று வருகிறான்.
    பாடாங் தோட்டத்தில் நூல்நிலையம் ஒன்றை அமைத்து ஆறுமுகத்தைத் திறக்கச் செய்கின்றான். ஆசிரியர் சாமி தலைமையில் ஆறுமுகத்திற்குப் பிரியாவிடை விருந்தையும் நடத்துகின்றான்.வஞ்சம் தீர்க்க நினைத்த கூட்டம் மேட்டுக் கடையிலிருந்து திரும்பும் ஓர் இரவு வேளையில் அவனையும் ஆறுமுகத்தையும் தாக்க கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றான். அங்குத் தோட்டத்தை விட்டு ஓடிப்போன மணியத்தைக் கைதியாய்ச் சந்திக்கின்றான். மருத்துவமனையில் மருதனைக் காண வந்த லீலா அவளுடைய விருப்பத்தைச் சொல்ல அதை மறுக்கின்றான் மருதன்.
    மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு துன்சம்பந்தனின் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதை வாழ்த்துகின்றான். கால் குணமானவுடன் அவனுக்கு ஸ்டோரில் வேலை வழங்கப்படுகிறது.வேலை அனுபவம் இல்லாததால் தனது பள்ளி நண்பனான சின்னக்கிராணி சண்முகத்தின் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. சின்னக்கிராணி சண்முகம் தோட்டத்தில் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்கின்றான்.
   கோடை காலத்தில் ஏற்படுகின்ற தண்ணீர் சிக்கலுக்குத் தோட்ட மக்களுக்கு ஆற்று நீர் கிடைக்க ஏற்பாடு செய்கின்றான் மருதன்.ஆசிரியர் சாமி அபாண்டமாய்க் குற்றம் சாட்டப்பட்டு குடும்பத்தோடு மாற்றலாகிச் செல்வது அவனுக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கின்றது. நீண்ட நாட்கள் மருதனைச் சந்திக்காத லீலா அவனை வீட்டில் வந்து சந்தித்துப் பேசிவிட்டுச் செல்கிறாள். அவளது வருகை பலருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தவே அதைத் தெளிவு படுத்துகிறான் மருதன்.
   தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் பாடாங் தோட்டம் களை கட்டுகிறது.கடனோடும் மதுவோடும் கொண்டாடப்படுகிற பண்டிகை மருதனைக் கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.தோட்டத்தில் வாழும் மூவின மக்களும் இத்தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கு கொள்கின்றனர். அவன் அப்பா ஆண்டியப்பனோ குடித்துக் கும்மாளம் போடுகின்றார்.
   பாடாங் தோட்டத்திலேயே நடைபெற்ற ராதாவின் திருமணத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய மருதன் மனம் கலங்குகின்றான். அன்றிரவு தங்கத்தின் வீட்டில் அவளைச் சந்திக்க, ராதாவுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை  ஊட்டுகிறான். தமிழகத்திற்குச் சென்று அடமானம் வைத்த நிலத்தையும் வீட்டையும் மீட்டுவர துடித்துக் கொண்டிருந்த ஆண்டியப்பனை வழியனுப்ப ஏற்பாடுகளைச் செய்கின்றான் மருதன். தந்தையைப் பினாங்கில் கப்பலேற்றிவிட்டு வீடு திரும்புகின்றான். அவருக்கு இங்கிருந்து பத்தாயிரத்திற்கு மேல் அனுப்பி கடன் படுகின்றான் மருதன். அங்கு ராஜ வாழ்க்கை வாழ்ந்து ஊர் திரும்பிய ஆண்டியப்பன் நோயாளியாய் படுக்கையில் சாய்கிறார்.
    மருதன் உருவாக்கிய காற்பந்தாட்டக் குழு சின்னக்கிராணி சண்முகத்தின் தலையீட்டால் கலைகிறது. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த மருதனின் அப்பாவும் இறைவனடி சேர்கிறார். அதன் பிறகு மருதன் தன் குடும்பத்தோடு தோட்டத்தை விட்டு வெளியேறி நண்பன் தமிழ்ச்செல்வனின் உதவியோடு புத்தகக்கடை ஒன்றை சித்தியவானில் தொடங்குகின்றான். உதய சூரியன் புத்தகக்கடையின் வியாபாரம் அதிகரிக்க கொஞ்சம் கடன் பெற்று சாப்பாட்டுக் கடை ஒன்றையும் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குகின்றான். லீலாவின் காதலை நட்பாகப் போற்றி தமிழ்ச்செல்வனுக்கு அவளை மணம் பேசி இருவரையும் இல்லற வாழ்வில் இணைத்து வைக்க முயற்சிக்கிறான்.
   சித்தியவானில் இருந்தாலும் தோட்டங்களுக்குச் சென்று நல்ல தரமான நூல்களைப் படிக்கும் இயக்கத்தை நடத்துகின்றான். மேலும், துணி வியாபாரத்தையும் வெற்றிகரமாக நடத்துகின்றான். மருதன் சித்தியவானுக்குச் சிறப்பு வருகைப் புரிந்த பி.பி.நாராயணனைச் சந்திக்கின்றான். தொழிற்சங்கத்தின் பலநோக்குக் கூட்டுறவு சங்கம் அவனுக்குத் தன்முனைப்பைக் கொடுக்கிறது. உதய சூரியன் நிலையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை நடத்துகின்றான்.
  மூத்தத் தங்கை மனோகரிக்குத் தமிழாசிரியர் ஒருவரை மணமுடித்து வைக்கிறான். அதன்பிறகு தமிழ்ச்செல்வன் லீலா திருமணமும் நிகழ்கிறது. வியாபாரம் நல்ல இலாபத்தைத் தந்ததால்  தைப்பிங்கில் ஒரு இலட்சியத்து பத்தாயிரம் மதிப்புள்ள சிறுதோட்டம் ஒன்றை வாங்குகின்றான். மணியத்தைவிட்டு ஓடிய நீலாவைக் கைக்குழந்தையோடு வறுமை கோலத்தில் கண்டு வீட்டிற்கு அழைத்து வருகிறான். மருதனுக்கு வியாபாரத்தில் எல்லா மூலைகளிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
  இளைய தங்கை சங்கரிக்கு மேலாளர் ஒருவரைத் திருமணம் செய்து வைக்கின்றான். மருதனின் தம்பி மதியழகன் மலாயாப் பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்வியைத் தொடர்கின்றான். பாடாங் தோட்டத்திற்குச் சென்ற மருதன் அங்கு மணியத்தைச் சந்தித்து அவனை அழைத்து வந்து நீலாவோடு சேர்த்து வைக்கின்றான். தாயின் தனிமையையும் வேதனையையும் உணர்ந்த மருதன் தன் மாமன் மகள் ருக்குமணியை மணக்கின்றான்.
     எல்லா வியாபாரத்தையும் விற்று ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய இரப்பர் தோட்டம் ஒன்றை வாங்கி அதற்குப் “பாட்டாளித் தோட்டம்” எனப் பெயரிடுகின்றான். அதை ஒரு முன்மாதிரி தோட்டமாய் மாற்றுவதில் மருதன் வெற்றி அடைகின்றான். பாட்டாளி தோட்டத்தை வாங்கி அதை உருவாக்குவதோடு அவன் தனது இலட்சியப் பயணத்தில் வெற்றி அடைகிறான் கர்ம வீரன் மருதன்.   

2 comments: