Monday, November 5, 2012

கலைச்சொல் - விளக்கம் (குமாரி புஷ்பவள்ளி சத்திவேல் )


1.
புதினம் Novel
கற்பனை கலந்த நீண்ட புனைக்கதை
2.
உலுக்கல்  
kejutan( 2011)
கதையோட்டத்தில் வாசகர்கள் எதிர்பாராது வெளிப்படும் சில மாற்றங்கள்/ நிகழ்வுகள்/ சம்பவங்கள்/ திகைப்பூட்டும் சம்பவங்கள்
3.
சிக்கல்/பூசல்/ போராட்டம் 
konflik( 2011)
பாத்திரங்களுக்கிடையே எழும்கருத்து வேறுபாடுகள்
( தனிநபர்-தனிநபர்) ( தனிநபர்- சமுதாயம்) ( தனிநபர் – தனக்குத்தானே )
4.
அழகுமொழி 
Bahasa bunga
இனிய சொல், உவமை, உருவகம் போன்றவற்றைக் கொண்டு அமையும் மொழிநடை
5.
ஒப்புமை  
Analogi
இரு வேறு பொருள்களில் காணும் ஒற்றுமையை ஒப்பிட்டுக் காட்டுவது
6.
வீழ்ச்சி நிலை  
Anti Klimaks
கதையின் உச்சத்திலிருந்து திடீரென வீழ்ச்சி அடையும் நிலை
7.
எதிர்மறைப் பாத்திரம்
Watak antagonis
கதையில் வில்லங்கத்தை உருவாக்குபவர்/ முதன்மைக் கதைப்பாத்திரத்தோடு மோதல்களை உருவாக்குபவர்
8.
சொல்லாட்சி
Diksi
ஒரு படைப்பாளர் தான் வலியுறுத்த விரும்பும் கருத்தைத், தெளிவாக வெளிப்படும் வகையில் தேர்ந்தெடுத்துக் கையாளும் பொருத்தமான சொற்களின் பயன்பாடு.
9.
சாரம்   
Abstrak              
படைப்பிலக்கியத்தின் கருப்பொருளை விளக்கப்படுத்தும் சுருக்க வடிவம்
10.
ஏரணமின்மை 
Absurd
நடைமுறை வாழ்வில் ஏற்றுக்கொள்ள முடியாத, அறிவுக்குப்பொருந்தாதவை
11.
உணர்த்தப்படும் செய்தி
Amanat/ Mesej
அறம் மற்றும் நன்னெறி தொடர்பான பல்வேறு செய்திகளைப் படிப்போருக்குப் படைப்பாளர் உணர்த்தும் செய்தியாகும்.
12.
கிளைநிகழ்ச்சி 
Episod
ஒரு நாடகத்தில் துணைக் கதைக்கருவுடன் தொடர்புடைய ஒரு நிகழ்வு.
13.
முருகியல்
Estetika
இலக்கியப் படைப்புகளில் வெளிப்படும் அழகியல் தன்மைகள். இதனை மொழிநடை, சொல்லாட்சி ஆகியவற்றில் காணலாம்.
14.
சூழ்ச்சி 
Helah/ Trick
எதிர்மறை கதைப்பாத்திரங்கள் தம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் தந்திர நடவடிக்கைகள்.
15.
பின்நோக்குநிலை
Imbas Kembali
முந்தைய நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிப் பார்த்தல்
16.
முன்நோக்குநிலை
Imbas muka
எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை முன்னறிவது
17.
அகத்தூண்டல்
Inspirasi
படைப்பிலக்கியம் ஒன்றை உருவாக்கும்வகையில் படைப்பாளன் ஒருவனுக்குப் புறக்கூறுகள் வழியோ, ஆழ்ந்த சிந்தனையின் வழியோ ஏற்படும் உந்துசக்தி.
18.
வஞ்சகப் புகழ்ச்சி  
Ironi
ஒருவரைப் பழிப்பது போல் புகழ்வது அல்லது புகழ்வது போல் பழிப்பது
19.
மனவெளிப்பாடு
Intuisi
படைப்பிலக்கியங்களை வாசிக்கும் வாசகனிடையே சுயமாக ஏற்படும் உள்ளுணர்வு
20.
உச்சக்கட்டம்
Klimaks
நெருக்கடி அல்லது சிக்கல் உச்ச நிலையை அடையும் கட்டம்
21.
இன்பியல் 
Komedi
நகைச்சுவை, நையாண்ட் , எள்ளல் முதலானவற்றை உள்ளடக்கி மகிழ்ச்சிகரமான முடிவைக் கொண்டு நிறைவுறும் படைப்புகள்
22.
முரண்
Kontradiksi
பொருள்களை மாறுபடக் கூறுவது
23.
நெருக்கடி நிலை  
Krisis
நாடகம் அல்லது கதையில் போராட்டம் தீவிரமடைந்து மிக உயர்ந்து, இனி அது தீர்வதற்குச் சிக்கல் அவிழ வேண்டியதுதான் என்று உணர்த்துகிற குறுகிய காலக் கட்டமேயாகும்.
24.
திறனாய்வு
Kritikan
ஒரு படைப்பின் நிறை குறைகளை நடுநிலை நின்று ஆய்தல்
25.
கதைநிரல்    Kronologi
நிரட்சி       Naratif
காலம், இடம் ஆகியவற்றுக்கு உட்பட்டு கதை, சம்பவங்கள் தடைபடாமல் சொல்லப்பட்டு நிறைவு பெறுவதை குறிக்கும். (முதல் அத்தியாயத்தில் தொடங்கி இறுதி அத்தியாயத்தில் நிறைவு பெறும் )
26.
தொன்மம்  (புராணிகம்) 
 Mitos
வரலாறும் நம்ப முடியாத அதீத கற்பனையும் கலந்த பழங்கதை
27.
நடப்பியல்  
Realisme
காவியப்பண்புகளும் அதீத கற்பனைகளும் கலவாமல் நிகழ்கால மனிதர் வாழ்வியலை உள்ளபடி பதிவு செய்தல்
28.
கதை ஊசல் 
Saspens
படிப்பவர்களுடைய / பார்ப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்காகக் கையாளப்படுகின்ற உத்திமுறை
29.
எள்ளல்
Satira
குறிப்பிட்ட நபரைப் பற்றிய நையாண்டி கலந்த படைப்பிலக்கியம்
30.
உணர்ச்சி வெளிப்பாடு
Sentimental
கதைப்பாத்திரங்கள் இரக்க உணர்வை, ஏக்கத்தை, கோபத்தை, துன்பத்தை, துயரத்தை, இயலாமையைத்  தாங்கள் ஏற்ற பாகத்தின் வழி காட்டுவது.
31.
நோக்குநிலை
Sudut pandangan
ஒரு கதாசிரியர் தந் கதையை வாசகர்களுக்குச் சொல்ல எடுத்துக் கொண்ட ஒரு  முறை அல்லது பாணியாகும். ( தன்மை நோக்கு, படர்க்கை/ புற நோக்குநிலை )
32.
துன்பியல் 
Tragedi
கதைப்பாத்திரங்களுக்கு எதிர்பாராமல் நிகழும் துயரச் சம்பவங்கள்
33.
புதைநிலை
Tersirat
படைப்பிலக்கியங்களில் புதைந்திருக்கும் கருத்துகள். ஆழ்ந்து நோக்க வேண்டும்

No comments:

Post a Comment