Monday, November 5, 2012

SPM இலக்கியம் 2012 இவ்வாண்டின் எதிர்பார்ப்புகள்


SPM இலக்கியம் 2012
இவ்வாண்டின் எதிர்பார்ப்புகள்

நாவல் - பொன்விலங்கு

கட்டுரைக் கேள்விகள்   (பாகம் 2)

கடந்த ஆண்டுக்கேள்விகள் (2007)

1. அ) பொன் விலங்கு நாவலில் சத்தியமூர்த்தியின் பாத்திரப்படைப்பை ஆராய்க
                                        (14 புள்ளி)

  ஆ) பொன் விலங்கு நாவலில் காலப்பின்னணியை விவரித்து எழுதுக 
                                        (6 புள்ளி)

 2. பொன் விலங்கு நாவலின் வெற்றிக்கு எதிர்மறைப் பாத்திரங்களின் பங்களிப்பு
    மறுக்கவியலாது. அவ்வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள    
    எதிர்மறைப்பத்திரங்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்து 
    எழுதுக.

அ)  கல்லூரி முதல்வர்                      (10 புள்ளி)
ஆ)  கண்ணாயிரம்                         (10 புள்ளி)

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2008)

1. பொன் விலங்கு நாவலின் வெற்றிக்குத் துணைப்பாட்திரங்களின் பங்கு அளப்பரியது. இந்நாவலின் வெற்றிக்குத் துணைநின்ற கீழ்க்காணும் துணைப்பாத்திரங்களின் பாத்திரப்படைப்பை ஆராய்க.

 (அ)   பாரதி   (10 புள்ளிகள்)
 (ஆ)  குமரப்பன் (10 புள்ளிகள்)


2. பொன் விலங்கு நாவலாசிரியர் நா. பார்த்தசாரதி பற்றிப் ஒரு கட்டுரை    
   எழுதுக.                              (20 புள்ளிகள்)




கடந்த ஆண்டுக் கேள்விகள் (2009)

1.  பொன் விலங்கு நாவலில் மோகினின் பாத்திரப்படைப்பை ஆராய்க 
                                        (20 புள்ளிகள்)

2.  சத்தியமூர்த்தி போன்ற இளைஞர்கள் இன்றைய இளைஞர்களுக்கு  
    முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.
    இக்கருத்தை எடுத்துக்காட்டுகளுடன் விவாதித்து எழுதுக    
                                        (20 புள்ளிகள்)

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2010)

1.  பொன்விலங்கு நாவலின் வெற்றிக்கு எதிர்மறைப் பாத்திரங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் பாத்திரப்படைப்பை ஆராய்க                                  (20 புள்ளிகள்)

2. பொன் விலங்கு நாவலைப் பற்றிய உமது கண்ணோட்டத்தைத் தொகுத்து எழுதுக
                                        (20 புள்ளிகள்)

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2011)

1. சத்தியமூர்த்தி எதிர்நோக்கிய சவால்களை விளக்கி எழுதுக. 
                                       (20 புள்ளிகள்)

2. மோகினி தற்கொலை செய்து கொண்டது சரியா? விவாதித்து எழுதுக.
                                        (20 புள்ளிகள்)

இவ்வாண்டின் எதிர்பார்ப்பு (2012)

1.       பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க.

2.       பொன்விலங்கு நாவலில் காணப்படும் சமுதாயச் சிந்தனைகளை விளக்கி எழுதுக.

3.       மோகினி - பாரதி இருவரையும் ஒப்பிடுக.

4.       கண்ணாயிரமும் மஞ்சள்பட்டி ஜமீன்தாரும் இழைத்த கொடுமைகளை விளக்கி எழுதுக.

5.       பொன்விலங்கு நாவலின் உத்தியை விளக்கி ஒரு கட்டுரை வரைக.

6.       மோகினி எதிர்நோக்கிய சிக்கல்கள்.

7.       பொன்விலங்கு நாவலைச் சிறந்த நாவலாகப் படைப்பதில் நா.பார்த்தசாரதி வெற்றி பெற்றுள்ளார். இதனை விளக்கி எழுதுக.

8.       பின்வரும் கதைப்பாத்திரங்களில் இருவரைத் தேர்ந்தெடுத்துப் பாத்திரப்படைப்பை ஆராய்க:
·              சத்தியமூர்த்தியின் அப்பா
·              மஞ்சள்பட்டி ஜமீன்தார்
·              முத்தழகு அம்மாள்

9.       பொன்விலங்கு நாவல் வாசகர்களுக்குச் சிறந்த படிப்பினையைத் தரவல்லது. இதனை விளக்கி எழுதுக.

10.     குமரப்பன், சத்தியமூர்த்தி ஆகியோரிடையே இருந்த நட்பின் சிறப்புகளைப் பற்றி விளக்கி எழுதுக.


நாடகம் - காவிய நாயகி

கட்டுரைக் கேள்விகள்

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2007)

1.      காவிய நாயகி நாடகத்தில் பொன்னியின் பாத்திரப்படைப்பை ஆராய்க
                                         (20 புள்ளி)

2.     காவிய நாயகி நாடகத்தில் நாடகாசிரியர் கையாண்டிருக்கும் கீழ்க்காணும் உத்திகளைப் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி எழுதுக.
           அ)  பின்னோக்கு நிலை
           ஆ)  கதை கூறல்

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2008)

1.  சேர மன்னனின் பாத்திரப் படைப்பை ஆராய்க   (20 புள்ளிகள்)

2.  எதிர்மறைப்பாத்திரங்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி   
    எழுதுக.
    அ)   காளிங்கராயர்  (10 புள்ளிகள்)
    ஆ)   தளபதி       (10 புள்ளிகள்)


கடந்த ஆண்டுக் கேள்விகள் (2009)

1.  காவிய நாயகி நாடகத்தின் கதைச்சுருக்கத்தை எழுதுக   (20 புள்ளிகள்)

2.  காவிய நாயகி நாடகம் மொழி, இன உணர்வை மோலோங்கச் செய்துள்ளது. இக்கருத்தை ஒட்டியோ மறுத்தோ எழுதுக   (20 புள்ளிகள்)

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2010)

1. கரிகால் சோழன், சேரன் நெடுஞ்சேரலாதன் ஆகியோரின் பண்புநலனை  
  ஒப்பிடுக                                  (20 புள்ளிகள்)

2. காவிய நாடகம் உமக்குள் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதுக 
                                           (20 புள்ளிகள்)

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2011)

1. பொன்னியின் கதைப்பாத்திரம்வழி வெளிப்படும் சமுதாயக் கருத்துகளை விளக்கி எழுதுக.                                             (20 புள்ளிகள்)

2. எதிர்மறைப்பாத்திரங்களின் சூழ்ச்சிகளைச் சான்றுகளுடன் விளக்கி எழுதுக 
                                         (20 புள்ளிகள்)

இவ்வாண்டின் எதிர்பார்ப்பு (2012)

1.     கரிகாலனின் பாத்திரப்படைப்பை ஆராய்க.

2.     காளிங்கராயரும் தளபதியும் தீட்டிய சதித்திட்டங்களை விளக்கி எழுதுக.

3.     காவிய நாயகி நாடகத்தில் காணப்படும் சமுதாயச் சிந்தனைகளை விளக்கி 
  எழுதுக.

4.     வெண்ணிப் பறந்தலைப் போருக்கான காரணங்களையும் அதன் 
   விளைவுகளையும் விளக்கி எழுதுக.

5.     பின்வரும் கதைப்பாத்திரங்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் 
   பாத்திரப்படைப்பை ஆராய்க.
           ·              கார்கோடகன்
           ·              வேண்மாள்
           ·              இரும்பிடர்த்தலையார்

6.     பொன்னியின் வழக்கு விசாரணை மூன்று முறை நடந்தது. இந்த வழக்கு விசாரணைகளின் முடிவுகளைத் தொகுத்து எழுதுக.

7.     சேர மன்னனுக்கும் பொன்னிக்கும் காதல் மலர்ந்த கதையையும் அது வெண்ணிப்பறந்தலையில் முடிந்ததையும் விளக்கி எழுதுக

8.   பொன்னி - வேண்மாள் ஆகிய இருவரையும் ஒப்பிடுக.
___________________________________________________________________

கவிதை

பாகம் 1 - கடந்த ஆண்டுக் கேள்விகள்

2007 - கோம்பா ஆறு, தமிழ்க்கவிதை
2008 - உயிர்க்கவிதை, தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ
2009 - விடிவெள்ளிக்கவிஞன் நீ, இயற்கையில் ஏழைமை
2010 - பஞ்சு, மாசக்தி
2011 - நீ உயர, பானையின் ஒப்பாரி

இவ்வாண்டு எதிர்பார்ப்பு  (2012)

v   காவியமும் ஓவியமும்,
v   முகம் நீ முகவரி நீ,
v   எங்கள் நாடு,
v   யார் தமிழ் படிப்பார்? 


பாகம் 2    கட்டுரைக் கேள்விகள்

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2007)

1.  யார் தமிழ் படிப்பார்?” என்ற கவிதையின் வாயிலாகத் தமிழ் 
    மாணவர்களுக்குக் கவிஞர் வலியுறுத்தவரும் கருத்து என்ன?                                  (20 புள்ளிகள்)

2.  மாசக்தி கவிதையில் காணும் அதன் கருத்து, யாப்பு மற்றும் அணி ஆகிய சிறப்புகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி எழுதுக.                                 (20 புள்ளிகள்)

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2008)

1.  காவியமும் ஓவியமும் கவிதையில் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.                                 (20 புள்ளிகள்)

2.  பஞ்சு கவிதையின் சிறப்புகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி எழுதுக.
                                       (20 புள்ளிகள்)

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2009)

1.     பானையின் ஒப்பாரி கவிதையில் கவிஞர் உணர்த்தவரும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக                        (20 புள்ளிகள்)

2. நீ உயர கவிதை உமக்குள் ஏற்படுத்திய பாதிப்பை விளக்கி எழுதுக
                                       (20 புள்ளிகள்)

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2010)

1.  எங்கள் நாடு கவிதை உமக்குள் ஏற்படுத்திய உணர்வினை எடுத்துக்காட்டுகளோடு  தொகுத்து  எழுதுக.   (20 புள்ளிகள்)

2.  முகம் நீ முகவரி நீ கவிதையின் சிறப்புகளை எடுத்துக்காடுகளுடன் விளக்கி     எழுதுக                                          (20 புள்ளிகள்)

கடந்த ஆண்டுக் கேள்விகள் (2011)

1. தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ
2. இயற்கையில் ஏழைமை


இவ்வாண்டின் எதிர்பார்ப்பு (2012)
            
v   தமிழ்க்கவிதை
v   விடிவெள்ளிக் கவிஞன் நீ
v   கோம்பா ஆறு
v   உயிர்க்கவிதை


No comments:

Post a Comment