Friday, November 16, 2012

கரிகாலன் நீதியை நிலைநாட்டுவதில் மேற்கொண்ட முயற்சிகள்

  கரிகாலன் நீதியை நிலைநாட்டுவதில் மேற்கொண்ட முயற்சிகளை  விளக்கி எழுதுக.
 
ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
 

கலைமாமணி இரா.பழனிசாமியின் கைவண்ணத்தில் மலர்ந்த காவிய நாயகிநாடகம் புறநானூற்றுப் பாடலை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் காவியமாகும்.சோழ மன்னனாக வரும் கரிகாலன் முக்கியக் கதாபாத்திரம் ஆவான். மன்னர்க்கழகு செங்கோன் முறைமைஎன்ற கொன்றை வேந்தனின் கூற்றுக்கொப்ப கரிகாலன் நீதியை நிலைநாட்டுபவன்.
  கரிகாலன் சோழ மன்னன் எனும் அடிப்படையில் எந்த ஒரு சிக்கலையும் விவாதித்த பின்னரே தீர்ப்பை வழங்குபவன்.பொன்னி பெருஞ்சேரலாதனின் மானங்காக்க கரிகாலன் சபைக்கே வந்து பெருஞ்சேரலாதனைப் போற்றி பொன்னி பாடினாள்.பொன்னியின் நடவடிக்கை தவறானது என்று தண்டனை வழங்க வேண்டுமென அனைவரும் கேட்டுக் கொண்டனர்.அந்தச் சபையில் அப்பொழுது காளிங்கராயரும் தளபதியும் பேசிய பேச்சும் பொன்னியின் செயல் தவறு என்பதை உறுதிபடுத்தும் வகையில் இருந்தது.இருப்பினும், கரிகாலன் அந்த வழக்கை விசாரித்த பின்னரே முடிவெடுக்க முடியுமென தீர்ப்புக் கூறினான்.பொன்னியின் பாதுகாப்பைக் கருதிஅவளை விருந்தினர் விடுதியில் தங்கவும் வைக்கிறான்.சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் விசயத்தில் கோவலனுக்கு மாறாத களங்கம் உண்டானது போல் தனக்கும் உண்டாவதிலிருந்து தற்காத்துக் கொண்டான் கரிகாலன்.
   நீதியை நிலைநாட்டுவதில் பொன்னியின் வழக்கில் கரிகாலனே துறவி வேடம் ஏற்கிறான்.பொன்னியின் பின்னணியைக் கண்டறிய துறவி வேடம் தரித்து பொன்னி தங்கியிருக்கும் விருந்தினர் விடுதிகுக்குச் செல்கிறான் கரிகாலன்.பொன்னி, துறவி வயதில் மூத்தவரும் அனுபவசாலியாகவும் இருப்பதால் தன் வாழ்வில் நடந்த சம்பவங்களைத் துறவி யிடம் கூறினான்.அவளது கதையைக் கேட்டு அவள் குற்றமற்றவள் எனவும் பொன்னி முடிசூடா சேர நட்டு பட்டத்து அரசி எனவும் முடிவு கூறினான்.
    கரிகாலனின் ஆட்சியக் கவிழ்க்க திட்டம் தீட்டிய காளிங்கராயரும் தளபதியும் பொன்னியைக் கொன்றால் அத்திட்டம் நிறைவேறும் என்று எண்ணினர்.இதனை அறிந்த கரிகாலன் பொன்னியின் உயிரைக் காப்பாற்றுகிறான்.காளிங்கராயரும் தளபதியும் விஷ வைத்தியன் கார்கோடகன் மூலம் பொன்னிக்கு விஷம் வைத்துக் கொல்ல திட்டமிட்டனர்.ஆனால், கோட்டை காவலர்களான தீவட்டி அமாவாசை மூலம் கேட்டறிந்து கரிகாலன் அவளைக் காப்பாற்றினான்.தவறு செய்ய முயன்ற கார்கோடகனைச் சிறையிலிட்டான்.
  காளிங்கராயரும் தளபதியும் மேற்கொண்ட கொலை முயற்சியைத் தவிர்த்து காளிங்கராயருக்கும் பாண்டியனுக்கும் இ¦டயே உள்ள உறவைக் கண்டுபிடித்தான் கரிகாலன்.காளிங்கராயன் பாண்டிய மன்னனின் ஒற்றனைச் சந்திப்பதை மறைந்திருந்து கண்டறிந்து கொண்டான் கரிகாலன்.இதன் முடிவாக கரிகாலன் பாண்டிய மன்னனின் ஒற்றனைக் காவலில் வைக்கிறான்.
     அமைச்சனும் தளபதியும் பல சதிகளைச் செய்தவர்கள் என நிரூபிக்க தான் துறவி வேடம் பூண்டு கண்டுபிடித்த செய்திகளை அவையில் அம்பலப்படுத்துகிறான்.  அவ்விருவரையும் விசாரித்து தண்டனை வழங்க உத்தரவிடுகிறான்.
இதனைத் தவிர்த்து நீதியை நிலைநாட்டவும் தான் களங்கமற்றவன் என நிரூபிக்கவும் தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைப்பதற்குக் கரிகாலன் முயற்சி செய்தான். காளிங்கராயரும் தளபதியும் பொன்னி எழுதிய ஓலைப் போல் ஓர் ஓலையைத் தயாரித்துக் கரிகாலன் மீது களங்கத்தைச் சுமத்துகின்றனர். பொன்னி எழுதியனுப்பிய உண்மையான ஓலையின் வழி இது சதிச்செயலெனத் தெளிவாகிறது.அடுத்த விசாரனைக்குள் சதிகாரர்களைக் கண்டு பிடிப்பதாக உறுதி பூண்டான் கரிகாலன்,
   ஆகவே, திருவள்ளுவர் மன்னர்களுக்கென்றே பரிந்துரைத்திருக்கும் ஒற்றாடல்அணுகுமுறையைப் பயன்படுத்தி நீதி வழவா மன்னனாகச் செயல்படுகிறான் கரிகாலன்.நடுநிலையான தீர்ப்பையும் வழங்குகிறான்.கரிகாலன் நீதியை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் இன்றைய சமூக அரசியல் தலைவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

No comments:

Post a Comment